Posted by: shuhaib | 14/03/2011

பஹ்ரைனில் மீண்டும் கலவரம் ஆரம்பித்தது.


பஹ்ரைன் நாட்டில் மன்னர் சேக் ஹமதுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.  அவர்கள் கடந்த மாதம் 14 தேதி துடங்கிய போராட்டத்தால் அரசு எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என்று சியா பிரிவு போராட்டக்காரர்கள் நேற்று மனாமாவில் மீண்டும் போராட்டத்தை துடங்கினார்கள். சாலைகளில் மண்களை குவித்து போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தினார்கள். வாகனங்களை அடித்து உடைத்தனர் ஒரு பிரிவினர். சாலைகளை வழிமறித்து அவர்கள் போராட்டத்தை துடங்கினார்கள். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பயங்கர மோதல்கள் ஏற்பட்டன. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் நிறைய பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள சல்மானியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ப்ட்டனர். போராட்டக்காரர்கள் பஹ்ரைன் பல்கலை களகத்தில் புகுந்து அங்கு இருந்த அலுவலக பொருட்களை அடித்து உடைத்தனர். இதனால் ஏற்ப்பட்ட மோதலில் அங்கு பயின்று வந்த மாணவர்கள் மற்றும் பெண்கள் காயம் அடைந்தனர்.

சியா பிரிவைச் சார்ந்தவர்கள் சமாதானமாக போராட்டம் நடத்துகிறோம் என்ற போற்வையில் சாலைகளில் இரவு நேரத்தில் நடந்து போகின்ற பிற நாட்டவர்களை மோசமான நிலையில் அடித்தனர். இதனால் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசைச் சார்ந்த இரண்டு பேர் இறந்தனர். மேலும் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.  இதில் பாகிஸ்தானைச் சார்ந்த ஒருவரின்  இரண்டு விரல்கள் துண்டிக்கப் பட்டன. இதனால் இரவு நேரங்களில் வெளியே வர இங்கு வேலை செய்யும் அந்நிய நாட்டைச் சார்ந்தவர்கள் பயப்படுகின்றனர். கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆங்காங்கே திறந்து வைத்திருந்த கடைகளில் கற்களைக் கொண்டு போராட்டக்காரர்கள் எறிந்தனர். இதனால் பொருட்கள் அதிகமாக சேதமாகின. கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சொடிக்கிடந்தன.

போராட்டக்காரர்களினால் சேதங்கள் அதிகமாவதாலும், அந்நிய நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகமாக தாக்கப்படுவதினாலும் இப்போராட்டத்தை தடுத்து நிறுத்த பஹ்ரைன் மன்னர் சவூதி மன்னரின் உதவியை நாடியுள்ளார். இதனால் இன்று 1000 ராணுவ வீரர்கள் சவூதி அரசு அனுப்பியுள்ளது. இதன் விளைவாக இன்று போராட்டம் அதிகமாகலாம் எனக் கருதி  பஹ்ரைனுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அல்ஜசீரா மற்றும் BBC போற்ற செய்தி ஊடங்கங்கள் பஹ்ரைன் மன்னருக்கு எதிராக செய்திகளையும், அவதூறுகளையும் பரப்பி வருகின்றன.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: