Posted by: shuhaib | 27/04/2011

iPad-ம் அதன் உபயோகங்களும்!


௦iPad-ம் அதன் உபயோகங்களும்

௦ தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு அதன் ரசிகர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. அதற்கு காரணம், அந்த நிறுவனம் தரும் ஒவ்வொரு தயாரிப்பையும் பல புதுமைகளுடனும், புதிய, புதிய தொழில் நுட்பங்களுடனும் வெளியிடுவது தான். இன்றைய காலத்தில் ஒருவனிடம் I PHONE என்றால் என்ன? IPAD என்றால் என்ன? என்று கேட்டால்… அவன் நம்மை ஒரு மாதிரியாக இவன் ஏதோ தேவலோகத்தை சார்ந்தவனாக இருப்பானோ….? என்று ஏறெடுத்து பார்த்து விட்டு நடையைக் கட்டிவிடுவான். அந்த அளவிற்கு பாமரன் முதல் படித்தவர்கள் வரை இன்று பல புதுமைகளோடு புழங்குகிறது இந்த IPAD. IPHONE -நான்… என்ன செய்யப் போகின்றது இந்த IPHONE 4 ?என்ற தலைப்பில் இங்கே எழுதிவிட்டேன்.

IPAD :
இந்த நவீன உலகில் மனிதனின் தேவைகளை மிக வேகமாக நிறைவேற்றுவதற்கு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பல தரப்பட்ட இயந்திரங்களின் இடையில் COMPUTER ன் பங்கு மிகவும் இன்றியமையாகிறது. அந்த வரிசையில் COMPUTER DIGITS முதலான DATA க்களை உள்வாங்கி, முறைப்படி கோர்த்த INSTRUCTION ஐச் செயற்படுத்தும் ஒரு பணியாளராக, மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஓர் இயந்திரமாகத் திகழ்கின்றது. PERSONAL COMPUTER, LAPTOP, NOTE BOOK ஆகியவற்றின் வரிசையில், மக்களால் பெரிதும் பேசப்பட்டும், உபயோகிக்கப்பட்டும் வரும் மறுமலர்ச்சிச் சாதனமே ‘சிலேட்டுக்கணனி’ என்றழைக்கப்படும் IPAD.PERSONAL DIGITAL ASSISTANT (PDA) அல்லது PALM TOP COMPUTER என்று அழைக்கப்படும் MOBILE DEVICE வகையைச் சேர்ந்ததுவே I PAD. சாதாரண COMPUTER ஐ போன்றே ELECTRONIC காட்சிஅமைப்பைக் கொண்டுள்ளதால்,WEB BROWSER மற்றும் MEDIA PLAYER போன்ற வசதிகளும் INTERNET, INTRANET, WIDE AREA NETWORKS மற்றும் WIFI வசதிகளையும் கொண்டுள்ளது இந்த IPAD.

PDA எனும் சொல் முதன் முதலில் LAS VEGAS இல் நடைபெற்ற CONSUMER ELECTRONIC EX-HIBITION ல் APPLE COMPUTER நிறுவனத்தின் CHIEF EXECUTIVE JOHNS KELLY அவர்களால் இவ்வுலகிற்கு ‘APPLE NEWTON’ என்று அழைக்கப்பட்ட முதல் PALMTOP அறிமுகத்துடனேயே உயிர்ப்பெற்றது. அதன் பின்னரே NOKIA நிறுவனமானது 1996 ஆம் ஆண்டு ‘9000 COMMUNICATOR’ என்றழைக்கப்பட்ட முதல் PDA செயற்திறன்
கொண்ட கையடக்கத் தொலைபேசியை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
இந்த PDA செயற்திறன் கொண்ட கையடக்கத் தொலைபேசிகள் காலப்போக்கில் மனிதனின் தேவைகளுக்கேற்ப பற்பல புதுமையான செயற்திறன்களை உள்ளடக்கி தற்போது, ‘SMART PHONE’ என்று சந்தையில் விற்பனையாகின்றது. வருடத்திற்கு மில்லியன்கணக்கான SMART PHONE கள் உலகில் விற்பனை
செய்யப்படுகின்ற அதேவேளை, தொலைபேசி செயற்திறன் அற்ற PDA வகை COMPUTER கள் மூன்று மில்லியனுக்கும் மேலாக விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்;.

PDA க்களின் சிறப்பியல்புகளை நாம் பார்போமாயின் DATA களை உள்ளீடு செய்வதற்கான TOUCH SCREEN, MEMORY STICK, MEMORY SLOT , BLUETOOTH ஆகியவை காணப்படுகின்றன. மேலும் அதில் APPOINTMENT CALENDAR, TO DO LIST, ADDRESS BOOK, E MAIL, MEMO, WEB BROWSER போன்ற வசதிகளும் உள்ளன.

இனி இக்கருவிகளின் சிறப்பியல்புகளின் பயன்பாட்டைப் பார்ப்போம்!

TOUCH SCREEN:
USER INTERACTION நோக்காகக் கொண்டே இந்த TOUCH SCREEN அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு SHORT CUT BUTTONS மட்டுமே
இதில் உள்ளன. ஒருவர் SCREEN யைக் கைவிரல்களால் தொட்டு அழுத்துவதன் மூலமும், ஒருபுறத்திலிருந்து மறு புறத்திற்கு இழுப்பதன் மூலமும் அதிலுள்ள APPLICATION ஐ உபயோகிக்கலாம்.

எழுத்துக்களை உட்செலுத்துவதற்கு:

(1) VIRTUAL KEYBOARD:
இங்கு KEYBOARD ஆனது TOUCH SCREEN ல் தென்படும். அதிலுள்ள எழுத்துக்களை கை விரலினால் அழுத்துவதன் மூலம் SELECT பண்ணலாம்.

(2) EXTERNAL KEYBOARD:
INFRA RED, BLUETOOTH மூலம் இணைக்கப்பட்ட பிரத்தியேக KEYBOARD னைக் கொண்டும் எழுத்துக்களை உட்செலுத்தலாம்.

(3) HAND WRITING RECOGNITION:
இம்முறையில், எழுத்துக்களை கைவிரலினால் எழுதுவதுபோல் TOUCH SCREEN ல் எழுதும்போது அதை இந்த PDA க்கள் எழுத்துக்களாக மாற்றுகின்றன. MARKET ல் தற்போதுள்ள APPLE I PHONE, APPLE I PAD TOUCH, LCD R இன்னும் TOUCH SCREEN ன் தொழில்நுட்பத்துடன் விற்பனையாகின்றன. அவற்றுள் ‘MULTI TASK’
அதாவது SINGLE PRESS ல் பலவகையான செயற்பாடுகளைச் செய்யும் ஆற்றல் குறிப்பிடத்தக்கது.

WIRELESS CONNECTIVITY:
இக்கால PDA க்களில் BLUETOOTH ன் மூலம் KEYBOARDS, HEAD SETS, GPS போன்றவற்றுடன் இணைக்கும் வசதியும் உள்ளன.
குறிப்பாக APPLE IPAD TOUCH ஆனது WIRELESS WIDE AREA NETWORKS உடனும் இணைப்புக்களை ஏற்படுத்தும் தனித்திறமை வாய்ந்த சாதனமாகும்.

WIRELESS SYNCHRONIZATION:
APPLE நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள I PHONE, IPAD TOUCH மற்றும்
IPAD போன்றவற்றில் CABLE ஒன்றின் மூலம் அல்லது WIRELESS NETWORK ன் மூலம்
சேகரிக்கப்பட்டுள்ள DATA’S மற்றும் FILE களை DESKTOP COMPUTER க்கு பறிமாற்ற முடியும்.

AUTO MOBILE NAVIGATION:
GPS என்றழைக்கப்படும் ஊர்தியை செலுத்துவதற்குத் தேவையான வழி நெறிகளை SCREEN ல் காட்டும் சாதனமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது
உற்பத்தி செய்யப்படும் DELUXE BUS களில் இவை பொருத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

RUGGED PDA:
சில வர்த்தக நிறுவனங்களும், அரசுத் துறை நிறுவனங்களும் ‘ ENTERPRISE DIGITAL ASSISTANTS ‘ என்றழைக்கப்படும் PDA க்களை உபயோகப்படுத்துகின்றன.
வேண்டிய சிறப்பியல்புகளை உள்ளடக்கியவாறு உருவாக்கப்படக்கூடிய PDAக்கள்
வர்த்தகஉபயோகத்திற்குத் தேவையான BARCODE READER, RADIO FREQUENCY IDENTIFICATION READER , MAGNETIC STRIPE CARD READER
போன்றசிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.மேலும் இவை
– WARE HOUSE, SUPPLY LINE CHAIN MANAGEMENT
– BAGGAGE DELIVERY
– MEDICAL TREATMENT
– HOSPITAL RECORD KEEPING
– PARKING ENFORCEMENT
– ACCESS CONTROL SECURITY
– CAPITAL ASSET MAINTENANCE
– UTILITY METER READING
– RESTAURANT WIRELESS WAITRESS போன்ற தேவைகளுக்கும் பயன்படுகின்றன.

MEDICAL AND SCIENCE USE:
DRUGS DATA PAGE, சிகிச்சை விவரம், MEDICAL NEWS போன்றவற்றிக்கும் PDA க்கள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளிகளின் கடந்த கால நோய் தொடர்பான பதிவு விபரங்களைப் பொறுத்து அவர்களுக்குத் தேவையான மருந்துமற்றும் சிகிச்சைகளை ஆராயவும், அவற்றின் முடிவுகளைப் பதிவு செய்யவும் இவை பெரிதும் உபயோகிக்கப்படுகின்றன. SENSOR WEB TECHNOLOGY உருவாக்கத்தோடு உடல் உணர்வலைகளின் மூலம் உடல்நிலையைக் கண்காணிக்கவும் குறிப்பாக நீரிழிவு நோய், இழுப்பு நோய் (EPILEPSY) போன்ற நோய்களின் அறிகுறிகளைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை தாமதமின்றிப் பெற்றுக்கொள்வதும் காலப்போக்கில் நடைமுறை விசயமாகவுள்ளது.

EDUCATIONAL USE:
MOBILE TECHNOLOGY பரவலாகப் பயன்பாட்டில் உள்ள இக்காலத்தில், கல்விக் கூடங்களும் தமது கல்வி முறையில் PDA க்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மாணவர்கள் ஆசிரியரின் உரையை டைப் செய்யவும், எழுத்துப் பிழைகளை சரிபார்க்கவும், விரிவுரையை பதிவு செய்து பின் வேண்டிய நேரத்தில் அதை மீண்டும் கேட்கவும் PDA க்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், ஆசிரியர்கள் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில்
பாடநூல்களை இணையத்தின் மூலம் இப்போது பரிமாற்றுகின்றனர். கையில் இருக்கும் ஒரு புத்தகத்தின் பக்கங்களை நாம் எவ்வாறு திருப்புகின்றோமோ,அதேபோன்று APPLE IPAD லும் ‘EBOOK’ என்றழைக்கப்படும் இணைய நூலின் பக்கங்களை TOUCH SCREEN இல் விரல்களால் முனைகளை திருப்புவது போன்றே திருப்பலாம். அத்துடன் எழுத்துக்களின் அளவை பெரிது படுத்தியும் வாசிக்கலாம். மேலும், DICTIONARY, WORD PROCESSING , ENCYCLOPEDIA போன்றவசதிகளும் உள்ளடக்கியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன.

ENTERTAINMENT USE:
சங்கீத ஸ்வரங்களோடு சங்கமிக்கும் உள்ளங்களுக்கு MP3 PLAYERல் தாங்கள் விரும்பும் பாடலைக் கண்டும், கேட்டும் களிக்க முடியும்.
– FORMULA 1 போட்டிகளில் பங்குபெறுவோர் தூரம், வேகம், நேரம் ஆகியவற்றைக் கணிக்கவும் பயன்படுத்துவர்.

– UNDER WATER DIVERS, BREATHING GAS MIXER மற்றும் DECOMPRESSION SCHEDULES
போன்றவற்றிற்காகவும் PDA க்களின் உதவிகளை பலர் நாடுகின்றனர்.

சாதாரண INDIVIDUAL COMPUTER, LAPTOP ஆகியவற்றைக் காட்டிலும் OPTICAL DRIVE அதாவது CD மற்றும் DVD ஆகியவை இந்த IPAD இல் இல்லாததே குறிப்பிட்டுக் கூறக்கூடிய விசயம் என்று சொல்லலாம். COMPUTER ன் ஏனைய அனைத்து USE வசதிகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது எடை,அளவு, செயற்திறன் ஆகிய மூன்றிலும் COMPUTER ஐக் காட்டிலும் மிகச் சிறப்பான அம்சங்களை உள்ளடக்கியவாறே IPAD கள் அமைந்துள்ளன. மேற்குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பம்சங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள APPLE நிறுவனத் தயாரிப்பான IPODஆனது தற்போது மேற்கத்திய நாடுகளில் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு சாதாரண IPAD நீள, அகலமும், 0.5 செ.மீ. விட்டமும், 0.7 கி.கிராம் நிறையும் கொண்ட இந்த APPLE IPAD னது, பெரிதும் வர்த்தகப் பயணிகளால் தற்போது
உபயோகிக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.

– ELECTRONIC MAIL
– PHOTO IMAGES
– VIDEOS
– YOUTUBE
– IPAD மற்றும் I TUNES (பாடல்கள் கேட்பதற்கு)
– NOTES & MEMO
– CALENDAR
– CONTACTS
– PRINT
– GAME CENTRE
– I BOOKS போன்ற இன்னும் பற்பல சிறப்பம்சங்கள் USER ன் விருப்பிற்கேற்றவாறு அமைத்துக்கொள்ளலாம். இத்தகைய தகமைகளைக் கொண்ட IPAD இந்த நூற்றாண்டின் வியத்தகு விந்தை என்பதில் ஐயமில்லை!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: