Posted by: shuhaib | 27/05/2011

வாக்கியங்களை அமைக்க வேண்டிய சூழ்நிலைகள்:-


சென்ற வகுப்பில் ஆங்கில இலக்கணத்தின் முக்கிய பிரிவுகளான simple, perfect, continuous  மற்றும் perfect continuous என்ற தலைப்புகளில் வாக்கியங்களை எப்படி அமைக்க வேண்டும் என்று கூறினேன் அல்லவா?

அவ்வாக்கியங்களை எந்தெந்தச் சூழ்நிலைகளில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இப்பொழுது மேலும் விரிவாகக் கூறுகிறேன்.

கவனியுங்கள்:

முதலில் நிகழ் கால வாக்கியங்களை அமைக்கலாம்.

  1. 1.     Present Tense

I read the news paper every day

நான் தினசரி செய்தித் தாள் படிக்கிறேன்

I go to library on Mondays

நான் திங்கக் கிழமைகளில் நூலகத்திற்கு செல்கிறேன்

He gets up at 7O’clock

அவன் 7 மணிக்கு எழுந்திரிக்கிறான்

She sings well

அவள் நன்றாகப் பாடுகிறாள்

It works well

அது நன்றாக வேலை செய்கிறது

They works well

அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்

இது போல வழக்கமாக நடைபெறும் செயல்களைக் குறிப்பிட simple present பயன்படும். He, She, It அருகில் simple present tense வாக்கியங்களில் verb உடன் ‘S’ சேரும் என்பது நினைவிரிக்கிறதல்லவா?

  1. 2.     Present Perfect

நிகழ் காலத்தில் நடந்து முடிந்த செயல்களைக் குறிப்பிட Present Perfect பயன்படுகிறது.

She has bought an umbrella

அவள் ஒரு குடை வாங்கியிரிக்கிறாள்

He has bought a car

அவன் ஒரு கார் வாங்கியிரிக்கிறான்

We have bought a house

நாங்கள் ஒரு வீடு வாங்கியிரிக்கிறோம்

They have gone to the temple

அவர்கள் கோவிலுக்குப் போயிரிக்கிறார்கள்

குறிப்பு: He, She, It அருகில் Has என்பதைப் பயன்படுத்த வேண்டும் . மேலும் perfect வாக்கியங்களில் past participle ஐப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்ததாக

Present Continuous

He is reading the news paper

அவன் செய்தித் தாள் படித்துகொண்டிரிக்கிறான்

My mother is cooking

என்னுடைய அம்மா சமைத்துக் கொண்டிருக்கிறாள்

My brother is playing cricket

எனது சகோதரன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான்

They are sleeping

அவர்கள் தூங்கி கொண்டிரிக்கிறார்கள்

I am taking bath

நான் குளித்துக் கொண்டிருக்கிறேன்

கவனிக்கவும்:

I am taking bath என்றால் நான் குளித்துக் கொண்டிருக்கிறேன் என்பது பொருள். இது ஒரு present continuous வாக்கியம். ஒரு செயல் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருப்பதைத் தெரிவிக்க present Continuous பயன்படுத்தப் படும்.

Present continuous ற்கும், simple present ற்கும் சில வேறுபாடுகள் உண்டு.

She is cooking என்றால் அவள் இப்பொழுது சமைத்துக் கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம். அதாவது இப்பொழுது சமையல் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் she cooks well என்றால் அவள் நன்றாக சமைக்கிறாள் என்று அர்த்தம். வழக்கமாக அல்லது பொதுவாக அவள் நன்றாக சமைக்கக் கூடியவள் என்று கூறும்போது.  She cooks well என்று கூறலாம். She cooks  well அவள் இப்பொழுது சமைத்துக் கொண்டிருக்கிறாள் என்று பொருள் கூடாது.

Present perfect continuous

She has been cooking since 6 O’clock

அவள் 6மணியிலிருந்து சமைத்துக் கொண்டிருக்கிறாள்

ஒரு செயல் எப்பொழுதிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைத் தருவிக்க Present perfect Continuous பயன்படும்.

He has been reading news paper since 8 O’clock

அவன் 8 மணியிலிருந்து செய்தித் தாள் படித்துக் கொண்டிருக்கிறான்.

I have been learning English for 2 weeks

நான் இரண்டு வாரங்களாக ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறேன்

அடுத்து

Past tense

I met him yesterday

நான் அவனை நேற்று சந்தித்தேன்

They came here last week

அவர்கள் போன வாரம் இங்கே வந்தார்கள்

Mani drove the car

மணி காரை ஓட்டினான்

Past perfect

 

கடந்த காலத்தில் நடந்து முடிந்த செயல்களை simple past ல் தெரிவிக்க வேண்டும். நடந்து முடிந்த இரண்டு செயல்களைப் பற்றி குறிப்பிடும் போது முதலில் நடந்த செயலைக் குறிக்க past perfect வாக்கியத்தையும் இரண்டாவதாக நடைபெற்ற செயலைக் குறிக்க simple past வாக்கியத்தையும் பயன்படுத்தட்ட வேண்டும்.

When I went there

நான் அங்கே போன போது

He had gone out

அவன் வெளியே போயிருந்தான்

(இங்கே When என்பதன் பொருள் பொழுது என்பதாகும்)

The thief had escaped when the police arrived

போலீஸ்காரர்கள் வந்த போது திருடன் (ஏற்கனவே) தப்பி ஓடியிருந்தான்

Past continuous

கடந்த காலத்தில் தொடர்ந்து நடைபெற்ற செயல்கள்

He was waiting for you

அவன் உனக்காக காத்துக் கொண்டிருந்தான்

I was working in that office

நான் அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்

The child was crying

குழந்தை அழுது கொண்டேயிருந்தது

Past perfect continuous

 

ஆங்கிலத்தில் Past perfect continuous  உபயோகம் அவ்வளவாகக் கிடையாது. இருப்பினும் உங்களுக்காக இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.

They had been waiting for you since 8 O’clock

அவர்கள் 8 மணியிலிருந்தே உனக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

We had been living there since 1980

நாங்கள் அங்கே 1980 வது வருடத்திலிருந்தே வசித்துக் கொண்டிருக்கிறோம்.

Future Tense

 

Simple future

I shall come tomorrow

நான் நாளை வருவேன்

He will help you

அவன் உனக்கு உதவி செய்வான்

It will rain

மழை பொய்யும்

எதிர் காலத்தில் நடைபெறப் போகும் செயல்களைக் குறிக்க simple future   பயன்படும்.

Future perfect

 

எதிர்காலத்தில் ஒரு செயல் நடந்து முடிந்திருக்கும் என்பதைத் தெரிவிக்கும் கருத்து.

I will have finished the work by 5 O’clock

நான் 5 மணிக்குள் வேலையை முடித்திருப்பேன்

They will have come

அவர்கள் வந்திருப்பர்கள்

Future continuous

 

The will waiting for me

அவர்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்

I will be watching T.V. tomorrow

நான் நாளை டி.வி. பார்த்துக் கொண்டிருப்பேன்

எதிர்காலத்தில் நாம் தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கும் செயல்களைத் தெருவிக்க future continuous பயன்படும்.

They will be standing outside

அவர்கள் வெளியே நின்று கொண்டிருப்பார்கள்.

Future perfect continuous

 

இதன் உபயோகம் மிகவும் குறைவாக உள்ளது

She will have been cooking since 6O’ clock

அவள் 6 மணியிலிருந்து சமைத்துக் கொண்டிருப்பாள்

They will have been waiting for me since 2 O’clock

அவர்கள் எனக்காக 2 மணியிலிருந்து காத்துக் கொண்டிருப்பார்கள்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

வினைச் சொற்களைச் சூழ்நிலைக் கேற்றபடி பயன்படுத்த ஆங்கில இலக்கணத்தில் மொத்தம் நான்கு முக்கியமான பிரிவுகள் உள்ளன.

  1. Simple
  2. Continuous
  3. Perfect
  4. Perfect Continuous

ஒவ்வொரு பிரிவையும் Present, Past, Future  இம்மூன்று காலங்களில் பயன்படுத்தலாம்.

சூழ்நிலைக்கேற்ப எந்தந்த பிரிவை எப்படி பயன்படுத்தட்ட வேண்டும் என்று தெரிந்து விட்டால், இலக்கண பிழை ஏற்பட்டு விடுமோ என்ற பயமின்றி, சுயமாக ஆங்கில வாக்கியங்களை அமைக்க முடியும்.


Responses

  1. now iam very cleard about verbs

  2. now i can speak english with out mistakes

    • super


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: