Posted by: shuhaib | 04/06/2011

இஸ்லாத்தில் இல்லாத வீண் விரயம்!


வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.

இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.

அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப் புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றன.

மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள் வளத்திலிருந்து போதுமான அளவு உண்டுப் புசித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் ஸகாத் எனும் ஏழை நிதியை பொருளீட்ட முடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன் எஞ்சி இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும் நாம் அன்றாடம் கவனித்து வருகிறோம். எதற்காக இந்த வீண் விரயம்? தேவைக்கேற்ப உணவுகளை தயாரித்து நாமும்,நம் வீட்டாரும் அளவாக உண்டு நம் அண்டை வீட்டானுக்கும் கொடுப்பதே இஸ்லாத்தின் மாண்பு. மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும்,  இன்னும் வேண்டும் என்று சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்கு சுவையானத் தீனிப் போடுவது வரை எல்லா நிலைகளிலும் எல்லை இல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச் செய்வது ஷைத்தானின் வேலையாகும். நான் வேலை செய்கின்ற கம்பனியில் கூட உணவுகளை தயாரித்து, சைட்டுகளில் வேலை செய்கின்ற லேபர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அவர்கள் தின்று போன எஞ்சிய உணவுகள் கை கூட படாமல் அப்படியே திரும்பவும் கம்பனிக்கே வந்து விடும். ஒருநாள் பாத்திரங்களை துப்புரவு செய்யும் இடத்திற்கு ஒரு நேரடி விசிட் அடித்தேன். அங்கே சென்று பார்த்தபோது என் நெஞ்சு வெடித்து விடும்போல் இருந்தது. காரணம் எஞ்சிய உணவை அவர்கள் குப்பைத் தொட்டிகளில் தட்டிக் கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் இது போன்று செயல்களை அவர்கள் செய்யும்போது இந்த வேலையை விட்டு ஓடி விடலாம் என்றும் கூட தோன்றும். சில நேரங்களில் நான் பக்கத்து கம்பனிகளில் வசிப்பவர்க்கும் கொடுப்பதும் உண்டு.

இன்று நாம் அன்றாடம் பார்க்கின்றோம் எதை உண்ணுவது, எதை பருகுவது என்று கூட தெரியாமல் சேற்றிலும், செதும்பிலும் வாழும் பிராணிகளைப் போன்று மனிதனும் உணவுகளை சாப்பிடத் துவங்கி விட்டான். நல்ல உணவா, கெட்ட உணவா, ஆகுமா, ஆகாதா? என்று கூட பார்க்காமல் அவன் பருகும் நிலை சில நேரங்களில் பார்ப்போரை முகம் சுளிக்கும் நிலைமைக்குக் கூடத் தள்ளி விடுகிறது. எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.

வீண் விரையம் என்பது நாம் பயன்படுத்தும் உணவினை யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு

வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடியாமல் கொட்டுவது என்பது வேறு.

இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும்) சிறிதை சேர்த்து சமைக்கச் சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம்.

அபூதர்ரே ! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது இதிலிருந்து பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்)அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள் ஆதார நூல்: திர்மிதி

உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதி சமையலறையிலேயே சிறிதை பக்கத்து வீட்டாருக்காக ஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப் போய் கைகளால் புரட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய் விடுகிறது.

இன்றும் உருவாக்கும் உணவுகளைப் பார்த்தால் கூட நம்மால் இது இன்ன உணவு என்று சொல்லமுடியாத அளவிற்கு உணவுகளின் நிலை மாறிவிட்டது. முன்பெல்லாம் இட்லியை உதிர்த்துப் போட்டு உப்புமா செய்து விடுவார்கள். மீதி இருந்த சோற்றை வெயிலில் காய வைத்து வடாம் செய்தார்கள். குப்பையில் தட்டும் இட்லியை உப்புமா என்ற நிலைக்கு மாற்றி குப்பையில் களையும் நிலையை மாற்றினார்கள் நம் முன்னோர்கள். இன்று உருவாக்கும் உணவினை எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு மாற்றுவது? ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில் இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்து கொள்வார்கள்.

அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம் அடைந்து முட்டை சேர்க்கப்பட்டது,

இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன் ஃப்ரை,அல்லது சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரை ஐட்டங்களும் சேர்க்கப்படலாம்.

பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால் வெரைட்டிகளை அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும், இதிலொன்றுமாக கை வைத்து விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர் அவைகளும் பெருமளவில் குப்பைகளுக்கே செல்கின்றன.

இது எல்லாவற்றியும் விட மோசமான செயலாக இன்று அனைவரும் கொண்டாடப்படும் உணவுத் திருவிழா காண்போரை கண்களில் நீரை வரவைக்கிறது. அவ்வளவு மோசமான நிலைமைகளில் வீண் விரயங்கள் நிறைந்திருக்கும். ஒரு சாதாரண 1 கிலோ அளவிற்கு எடை உள்ள தர்பூசணியைக் கூட அவர்கள் வெட்டி வீணாக்கி குப்பையில் போட்டு விட்டு மீதி 100 கிராம் அளவில் ஒரு பூ வடிவில் செய்து காட்சிப் பொருளாக்கி வைத்து விடுவார்கள். பார்வையாளர்கள் பார்க்கும்போது தாங்க முடியாத ரசனை வேறு. இதில் என்ன மானம் கெட்ட ரசனை இருக்கிறது.? குப்பையில் போன உணவிற்கு கணக்கு இல்லையா?

இவ்வாறு செய்வதை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது எந்தளவுக்கென்றால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம்…

உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அறிவுருத்தினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத்,திர்மிதி.

ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில் தட்டை, தட்டையாக கொண்டுப் போய் குப்பையில் தட்டலாமா ?சிந்தித்தால் சீர் பெறலாம்.

விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து சமநிலைப் படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது இஸ்லாம்.

வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்

ஏழைகள் என்பவர்கள் எங்கிருந்தோ தேடிக் கண்டுப் பிடித்து அழைத்து வரப்படுபவர்கள் அல்ல மாறாக ஒவ்வொரு பணக்காரர்களின் குடும்பத்திலும் ஏழைகள் இருக்கின்றனர் அவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதிகபட்சம் உணவுகள் குப்பைக்குப் போகாது.

ஆனால் விருந்துகளில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் இந்த ஏழைகளைக் கண்டால் முகம் சுளிக்கலாம் என்றுக் கருதியேப் பெரும்பாலும் இரத்த உறவுகளாகிய ஏழைகள் அழைப்பதில்ல. அழைத்தாலும் இவர்களுடன் அல்லாமல் வேரொறு ஹாலுக்கு அனுப்பப்படுவார்கள் அதனால் அவர்களது உணவுகளை குப்பையில் கொட்ட வைத்து அல்லாஹ் அவர்களை ஷைத்தானின் தோழர்களாக்கி விடுகின்றான்.

அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.

நல்ல முன் மாதிரி

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஸிட்னி நகரில் சர்ரி ஹில்ஸ் என்ற ஊரில் இயங்கும் ஓட்டல் ஒன்றில்

Ø சாப்பாட்டை மீதம் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும்,

Ø முழுமையாக சாப்பிட்டால் 30 சதவிகிதம் விலையில் சலுகை வழங்கப்படும்  என்றும் அறிவித்து போர்டு வைத்துள்ளனர்.

இந்த முன் மாதிரியை அனைத்து ஹோட்டல்களிலும் பின்பற்றினால்,

மீதம் வைக்காத அளவுக்கு போதுமான சாப்பாட்டை வீடுகளில் சமைத்தால்,

விருந்துகளில் ஏழைகளும் அழைக்கப்பட்டு சமமாக நடத்தப்பட்டால்,

அல்லாஹ்வின் அருட்கொடையாகிய உணவு குப்பைக்கு செல்வதை ஓரளவாவது தடுத்து நிருத்த முடியும்.

அவ்வாறு தடுத்தால் ஷைத்தான் நுழையும் வழிகளில் ஒன்றை அடைத்து ஷைத்தானின் சூழ்ச்சி முறியடிக்கப்படும்.

இறைவனின் அடியார்களை அவனின் நினைவிலிருந்து திசை திருப்புவதற்காக ஷைத்தான் வகுத்தப் பலவழிகளில் பொருளாதாரத்தை வீண் விரயம் செய்வதற்காக தூண்டும் வழி முக்கியமான வழியாகும்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.

Ø உணவு இறைவனின் அருட் கொடை இந்த அருட் கொடையை வீதியில் வீசி எறியலாமா ?

Ø வீதியில் வீசி எறியும் அளவுக்கு மிதமிஞ்சி விருந்து செய்யலாமா ?

Ø இன்று உலகில் எத்தனையோ மக்கள் உணவு கிடைக்காமல் செத்து மடிவதற்கான காரணங்களில் குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுகள் சீரழிக்கப்படுவதும் முக்கியக் காரணம் என்பதை பலருடைய மனம் ஏற்க மறுக்கின்றது ஏனோ ???

சிந்தியுங்கள் சீர் பெறுவீர்கள்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: