Posted by: shuhaib | 15/11/2011

உடலுக்குப் பயிற்சி! உள்ளத்திற்கு மகிழ்ச்சி!


இரஷ்ய நாட்டின் சிறந்த அறிஞர் டால்ஸ்டாய் ஒரு நாள் அவரிடம் ஓர் இளைஞன் வந்து “ஐயா, நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்க வேண்டும். ஆனால் அதற்கு மூலதனம் என்னிடம் ஒன்றும் இல்லை. நீங்கள் கொஞ்சம் பணம் தந்தால் அதை வைத்து நான் பிழைத்துக் கொள்வேன்” என்றான்.

அதற்கு டால்ஸ்டாய் உடனே,

சரி, உனக்கு நான் நீ கேட்டவாறு பணம் தருகிறேன், அதற்குப் பதிலாக உன்னுடைய ஒரு விரலை தருவாயா? என்றார். உடனே அவன், விரலா! அது எப்படி முடியும்!

சரி இன்னும் அதிகமாக பணம் தருகிறேன். அதற்கு பதிலாக உன்னுடைய கண்ணைத் தருவாயா? என்றார்.

கண்ணா! அதைக் கொடுத்து விட்டால்….

இது என்ன? இவர் இப்படி கேட்கிறாரே என்று அந்த இளைஞன் அங்கிருந்து புறப்படத் தயாரானான்.

உடனே, டால்ஸ்டாய், சிரித்துக் கொண்டே, தம்பி! இங்கே வா! உன்னிடம் விலை மதிக்க முடியாத உடலின் உறுப்புகள் இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டோம்.

“அது தான் உனது மூலதனம். அதை நன்றாகப் பயன்படுத்து. நீ மிகச் சிறந்த செல்வந்தனாய் உயர்வடைவாய்” என்றார் டால்ஸ்டாய்.

அப்பொழுது தான் அந்த இளைஞன் தன்னிடம் உள்ள உடல் உறுப்புகளை கவனிக்கத் தொடங்கினான். அடாடா… அற்புதமான உடலும், உறுப்புகளும் தன்னிடத்தில் உள்ளன. இத்தனை நாள் இதை புரியாமல் இருந்து விட்டானே! என்று நினைத்தான்.

அன்பான இளைஞர்களே! நம் அனைவரிடத்திலும் அழகான உடலை எப்படி பேணிக் காப்பது? ஆரோக்கியமான உடல் நிலை தனக்கு வேண்டும். இது தான் ஒவ்வொருவரின் ஆசையும், கனவும். இதை அடைவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. ஆம்! முறையான உடற்பயிற்சி உங்களை இளைஞராய் இருக்க வைக்கும். பத்து வயது குறைவாகக் காட்டும். தேகம் வலுவடையும். இதயத்தை வலுப்படுத்தும், சக்தியின் அளவை மேம்படுத்தும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

துள்ளித்திரியும பள்ளிப் பருவம் முடிந்த உடனே, அதாவது 18 வயதுக்குள் விளையாட்டு, உடற்பயிற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறோம்.

18 வயதிற்கு பின்னர் 5 சதவிகிதம் இளைஞர்களே உடற்பயிற்சி மேற்கொள்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றது.

40 வயதிற்குப் பின்னர் உடற்பயிற்சி செய்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

“சுவரை வைத்து தான் சித்திரம் வரைய முடியும்” என்பது நமது முன்னோர்களின் அனுபவ மொழி

அதேபோல, உடல் நலத்தைப் பொறுத்து தான் வாழ்க்கையின் வெற்றி வெளிப்படும். எல்லாமே உடம்பை பொறுத்து தான் உள்ளது.

அதனால் தான் திருமூலர்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்.

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே!

 

என்று உடலோம்பலின் அவசியத்தை திருமந்திரத்தில் குறிப்பிடுள்ளார். மனிதன் தான் நினைத்ததை அடைய உடல் ஆரோக்கியம் முக்கியம். அந்த ஆரோக்கியம் தான் உளத்தையும் நடு நிலைப்படுத்தும், உள்ளத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

உள்ளத்திலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு உணர்ச்சியும், உடலைத் தாக்குகின்றது. உணர்ச்சிகளின் தாக்குதலுக்கு ஏற்ப உடல்நிலையிலும் மாற்றம் அடைகின்றது.

“பலமுற்ற தேகத்தில் தான் திடமான மனம் இருக்க முடியும்”

என்பார் சிந்தனையாளர் ரூசோ.

கடினமான உழைப்பு, உற்சாகம் தரும் விளையாட்டு, பிறரை ஏமாற்றாமை, பொறாமை கொள்ளாமை, இருப்பதை கொண்டு திருப்தி அடைதல், இவைகள் தான் உன்னதமான வாழ்க்கையின் நெறிமுறைகள் ஆகும்.

நடை நோய்க்குத் தடை

டாக்டர் ஃப்ரட் ஸ்டட்மன் என்பவர் தான் முதன் முதலாக நடப்பதை பயிற்சியாக மேற்கொண்டார்.

உடல் உறுதிக்கும், அழகான தோற்றத்திற்கும் நடைப் பயிற்சி மிகவும் நல்லது. இரத்த ஓட்டம் சீராக்கப்படுகிறது. தசைகள் வலுவடைகின்றன. நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

முதுகுவலி, இடுப்பு வலி போன்றவை வெகுவாக குறைக்கின்றன. காரணம் முதுகெலும்பின் கீழ் தான் உடலின் ஆதார சக்தி உள்ளது.

நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பெரும்பாலான நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இப்பயிற்சியானது சாதாரணமாக இல்லாமல் ஊக்கமுள்ளதாக இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் தினமும் நடக்கிறோம் என்பது முக்கியமில்லை.

ஒரு குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு குறைந்த நேரத்தில் ஊக்கமாக நடந்து செல்கிறோம் என்பது தான் முக்கியம்.

காலையில் தினம் 3 கிலோ மீட்டர் தூரம் நடப்பதன் மூலம் தேவையின்றி உடலில் சேரும் கொழுப்பு குறைகிறது. உடல் இளைப்பதுடன் இளமையும், புதுமையும் பெறுகின்றது.

உடல் பலம் ஆன்ம பலம் என்னும் இரண்டு பெரிய சக்திகள் கிடைக்கின்றன. அந்த சக்தியில் பல சிறந்த சாதனைகளை செய்யலாம்.

உங்கள் சக்தியை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.அதுதான் உங்கள் மனம் பல பிரச்சனைகளிலிருந்து விடுபடும். நடந்த பிறகு சிந்தித்தால் குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும்.

உங்களை நீங்களே கண்டறிய உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் உதவுகிறது.

“ஏரோபிக்” திறன்

முப்பது வயதிற்கு மேல் உடம்பில் உற்சாகமும், ஊக்கமும் குறைந்து போகின்றது. ஏன் இப்படி சோர்ந்து இருக்கின்றீர்கள் என்று யாராவது கேட்டால், வயதாகிக் கொண்டு இருக்கிறதே என்று லேசாக சொல்லிவிடுவார்கள்.

உடலில் உற்சாகம், குறைந்து போவதற்கு வயது மட்டும் ஒரு காரணமல்ல. சரியான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுதான். “நம்மிடம் இருக்கும் எல்லாப் பொருள்களில் மிக உயர்ந்தது உடல் நலமே, உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்கும். அளவைப் பொறுத்து தான் உடல் ஆரோக்கியமும், மனவளமும் அதிகரிக்கிறது என்பார் காந்தியடிகள்.

ஏதாவது காரியம் செய்து கொண்டிருந்தால் போதும் உடல் உறுதியாகும். “ஏரோபிக்திறன்” குறையாமல் இருக்கும் வயதாவதே தெரியாது.

“ஏரோபிக்” என்பது கை கால்களில் அசைவு பயிற்சிதான். ஏரோபிக் திறன் என்பது நுரையீரலுக்குள்ளே நுழைகிற காற்றில் உள்ள ஆக்சிஜன் எவ்வளவு சதவீதம் நம் ரத்தத்தில் உள்ளிழுகப்படுகிறதோ அந்த அளவு அதிகமாகும்.

சாதாரணமாக 25 வயது வரை இது அதிகமாக இருக்கும். அதன் பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் இதன் அளவு குறைய ஆரம்பிக்கும். மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தால் மூச்சு முட்டும், மூட்டுகள் வலிக்கும்.. உடலின் எடையும் எடையும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.

ஏரோபிக்கின் நோக்கமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடம்பு சேகரிக்கும், ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதுதான்.

இதயத்தில் வேகத்தைக் காட்டி அதிக ரத்தத்தை வெளியேற்றி உடம்பு முழுவதும் பரவலாக்கும் இதன் மூலம் உடலின் சக்தியும் ஆற்றலும் கூடும்.

சக்தியைத் தரும் உடற்பயிற்சி

நன்றாக உடற்பயிற்சி செய்பவர்களிடத்தில், இளமையும், திறமையும், வேகத்திறனும் அதிகரிக்கின்றது என்று ஆய்வுக்கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலம் உள்ளவர்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்களிடத்தில் எல்லாமே இருக்கிறது.

“இயந்திரங்களின் உராய்வை எண்ணெய் தடுப்பது போல உடல், உள்ளம் ஆகியவற்றின் உராய்வை விளையாட்டுக்கள் தடுக்கின்றன.” என்பார் பெஞ்சமின் பிராங்களின்.

“காலை எழுந்தவுடன் படிப்பு – மாலை முழுவதும் விளையாட்டு” என்பார் மகாகவி பாரதியார்.

மாலை நேரத்தில் சிறிது நேரம் விளையாட வேண்டும். அது உடலுக்கு புது உற்சாகத்தையும், சக்தியையும் கொடுக்கும்.

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உள்ளத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் ஆகவே,

“உங்கள் உடலும் உள்ளமும் ஒருங்கிணைத்து
செயல்பட்டால் வெற்றி நிச்சயம்”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: