Posted by: shuhaib | 07/07/2010

வாக்கியம் அமைக்கும் முறை…


சென்ற வகுப்புகளில் weak  மற்றும் strong verbs பற்றித் தெரிந்து கொண்டீர்கள். பட்டியலில் இடம் பெற்றுள்ள சொற்கள் ஒவ்வொன்றயும் பலமுறை படித்து மனதிற்பதிய வைத்துக் கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் அடுத்த வகுப்பை துவங்குகிறேன். இவ்வகுப்பில் வாக்கியம் அமைக்கும் முறை பற்றிக் கூறுகிறேன் கவனயுங்கள்.

வாக்கியம் என்றால் என்ன?

வாக்கியம் எனபது பல் எழுத்துக்களின் தொகுப்பாகும். பல எழுத்துக்களை ஒன்றாகச் சேர்த்தால் மட்டும் ஒரு வாக்கியத்தை அமைக்க முடியாது. வாக்கியம் என்றால் பல எழுத்துக்களின் தொகுப்புதான். அனால் அவ்வெழுத்துக்களின் தொகுப்பு ஒரு முழுமையான அர்த்தம் தந்தால்தான் ஒரு வாக்கியம் என்று கூற வேண்டும். நான் இது போலக் கூறினால் நீங்கள் புரிந்து கொள்வது கடினம்தான். எனவே ஒரு உதாரணம் மூலம் இக்கருத்தை விளக்குகிறேன்.

‘ஆங்கிலத்தில் பேசுவது’ என்று நான் எழுதியுள்ளேன். இது ஒரு வாக்கியமா? இல்லை, இதை ஒரு வாக்கியம் என்று கூற முடியாது. ஏனெனில் இவ்வாக்கியத்தின் மூலம் ஒரு முழுமையான கருத்தை நாம் அறிய முடிகிறது.

எனவே, இதன் மூலம் நான் உங்களுக்குக் கூறும் ஒரு முக்கியமான விஷயம் யாதெனில் பல எழுத்துக்கள் ஓன்று சேர்ந்து ஒரு முழுமையான அர்த்தம் தந்தால் அதை ஒரு வாக்கியம் என்று நீங்கள் கூறலாம்.

அது சரி. வாக்கியத்தை எப்படி அமைப்பது என்று கூறுங்கள் சார், என்று நீங்கள் கேட்கப் போகிறீர்கள். இதோ வாக்கியங்களை அமைத்துப் பார்க்கலாம்.

வாக்கியத்தில் பல வகைகள் உள்ளன. இவ்வகுப்பில் ஒரு சில வகைகளைப் பற்றி மட்டும் கூறப்போகிறேன். அதுவும் எளிமையான வாக்கியங்களைப் பற்றி முதலில் கூறப்போகிறேன்.

ஒரு வீடு கட்ட வேண்டுமானால் நமக்கு செங்கல், சிமெண்ட் மற்றும் மணல் தேவைப்படும். அதைப் போலவே ஒரு வாக்கியத்தை அமைக்கச் சில பொருட்கள் தேவை.part of speech. சொற்களின் வகைகள் என்ற தலைப்பின் கீழ் 8 பகுதிகளைப் பார்த்தோம் அல்லவா? அவைகளைப் பயன்படுத்தி நாம் வாக்கியங்களி அமைக்கலாம். எல்ல வகைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமல்ல… ஆனால்

Verb வினைச் சொல்லைப் பயன் படுத்தாமல் ஒரு வாக்கியத்தை அமைக்க முடியாது.

ஒரு வாக்கியத்தை அமைக்க வினைச் சொல் தேவை. வினைச் சொல் இல்லாமல் நம்மால் ஒரு வாக்கியத்தை அமைக்க இயலாது எண்ட கருத்தை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வாக்கியம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டீர்கள். இப்பொழுது வாக்கியங்களின் வகைகள் யாவை என்பதைப் பற்றி விளக்குகிறேன்.

  1. உடன்பாட்டு வாக்கியம்

இதை ஆங்கிலத்தில் Affirmative Sentence அல்லது Statement  என்று  கூறுகிறோம்.

  1. எதிர் மறை வாக்கியம்.இதை ஆங்கிலத்தில் Negative என்கிறோம்.
  2. Interrogative  அதாவது வினா வாக்கியம்.
  3. Exclamatory Sentence வியப்பு வாக்கியம்.

இது போல ஆங்கில வாக்கியங்கள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

இந்த நான்கு தலைப்புகளையும் ஒரு முறை படித்து நினைவில் வைத்துக் கொண்டால் போதும் ஒவ்வொரு பிரிவையும் நான் தனித் தனியாக விளக்கப் போகிறேன்.

இதுவரை வாக்கியம் என்றால் என்ன என்றும், வாக்கியங்கள் நான்கு பிரிவுகளாக பிரிந்துள்ளன என்பது பற்றியும்  தெரிந்து கொண்டீர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி கூறிவிட்டு வாக்கியங்களை அமைக்கத் துவங்கலாம் என்று நினைக்கிறேன். என்ன சார், இதுவரை வாக்கியத்தை எப்படி அமைப்பது என்று கூறாமல் வேறு எதையோ கூறிக்கொண்டு இரிக்கிறீர்களே!  என்று நீங்கள் நினைக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக முழுமையாகத் தெரிந்து கொண்டால்தான் நம்மால் பிழையின்றி வாக்கியங்களை அமைக்க முடியும். எனவே ஒரு முக்கியமான விஷயத்தை கூறிவிட்டுக்  அதன் பிறகு வாக்கியத்தை அமைக்கத் துவங்குகிறேன்.

கவனயுங்கள்

ஒரு வாக்கியத்தை அமைக்க VERB என்ற வினைச்சொல் தேவை. ஆனால் எல்லா வாக்கியங்களிலும் வினைச் சொல் இடம்பெறத் தேவையிருக்காது. எனவே வினைச் சொல் இடம் பெறாத வாக்கியெங்களில் துணை வினைச்சொற்கள் இடம் பெறலாம்.

துணை வினைச்சொற்கள் என்பதை ஆங்கிலத்தில் AUXILIARY VERBS என்கிறோம்.

இதற்க்கு முன்னால் நான் உங்களுக்கு சொன்ன வினைச்சொர்களை MAIN VERBS என்று அழைக்கலாம்.

இப்பொழுது நாம் வாக்கியங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. MAIN VERB
  2. AUXILIARY VERB

இப்பொழுது எனது வேலை எளிதாகி விட்டது என்று நினைக்கிறேன்.

நமது வசதிக்காக நாம் வாக்கியங்களை இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளோம்.

  1. MAIN VERBS
  2. AUXILIARY VERBS

இக்கருத்தை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு விட்டால் இனி வாக்கியங்களை அமைப்பதில் எவ்விதக் குழப்பமும் தோன்றாது.

  1. MAIN VERB (இணைந்த வாக்கியம் என்றால் என்ன?)

இதுபோன்று சந்தேகம் உங்களுக்கு இப்பொழுது தோன்றலாம்.

அட்டவணையில்

GO                                                         போ

COME                                                   வா

SEE                                                         பார்

WALK                                                    நட

READ                                                     படி

இது போன்று நிறைய வினைச் சொற்கள் இடம் பெற்றுள்ளன அல்லவா?

இவைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தால் அதற்க்கு MAIN VERBS இணைந்த வாக்கியங்கள் என்று பெயர்.

இனி அடுத்த வகுப்பில் AUXILIARY VERBS பற்றி கூறுகிறேன்.


Responses

  1. pls continue……………..

  2. sir ithea fulla padichitu iruken so continue pannunga brother plz….
    rombo nala iruku…

  3. please all of them must read


Leave a comment

Categories