Posted by: shuhaib | 16/06/2010

மூட்டு வலிக்கு முட்டுக்கட்டை


“நின்னா உட்கார முடியல, உட்கார்ந்தா நிக்க முடியல” என்று கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கூறக்கேட்டிருப்போம். அதற்கு காரணம் வேறொன்றுமில்லை, வயதானவர்களுக்கு எலும்பில் தேய்மானம் ஏற்படும். அதனால், அவர்களுக்கு மூட்டுவலி ஏற்படும்.

பொதுவாக 40 வயதைத் தாண்டி விட்டாலே வந்துவிடும் தொல்லை தான் இந்த மூட்டுவலி. இதில் பலவகைகள் உள்ளன. இருந்தபோதும், அவற்றில் இரண்டு வகை மூட்டுவலிகளே முக்கியமானவை. ஒன்று, சோர்வுடன் கூடிய மூட்டுவாதம். இதற்கு சோர்வைப் போக்கும் மருந்துகளுடன் வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

மற்றொன்று, சோர்வில்லாத மூட்டுவாதம். இது மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகளை பாதிக்கிறது. இந்த எலும்பைத்தான் நாம் அதிகமாகப்பயன்படுத்துகிறோம். எடைக்கட்டுப்பாடு மற்றும் முறையான உடற்பயிற்சிகள் மூலம் இதை சரி செய்யலாம்.

காரணங்கள்:

* சவ்வு அல்லது அதில் சுரக்கும் நீர் அல்லது வெளியில் சுற்றியுள்ள தசைநார்கள் காரணமாக இருக்கலாம்.

* உடலில் உப்புச்சத்து குறைந்தாலும், அதிகமானாலும் சவ்வு பாதிக்கப்படும். அதனால், மூட்டுவலி ஏற்படும்.

* சில நுண்கிருமிகள் கூட மூட்டுவலியை உண்டாக்கி விடும்.

* பால்வினை நோயான மேகவெட்டையாலும் மூட்டுவலி ஏற்படும்.

* தேவைக்கதிகமான கொழுப்புச்சத்து உடலில் சேர்வதாலும், அதிகப்படியான நீர் சேர்வதாலும் உடல் எடை அதிகரிக்கும். சிறுநீரகம் திறன் குறைவதும் ஒரு காரணம்.

* எலும்புத் தேய்மானம் சிலருக்கு இயற்கையாகவே இருக்கிறது. அறுவை சிகிச்சையின் மூலம் கருப்பை அகற்றிய பெண்களுக்கும் எலும்பு தேய்ந்து மூட்டுவலி வர வாய்ப்புள்ளது. ஒரு சில ஹார்மோன்களும் இந்த பாதிப்பிற்கு காரணமாகின்றன.

* தரையில் சம்மணம் போட்டு உட்கார்வதும், முழந்தாள் போடுவதும் முழங்கால், இடுப்பு வலிகளை அதிகமாக்கும். தலைக்கு மேல் கைகளை வைத்துக் கொண்டு உறங்கக்கூடாது. அது தோள்களுக்கு வலியைக் கொடுக்கும்.

என்ன செய்யலாம்?

* தைலம் தேய்ப்பது, ஒத்தடம் போடுவது நிரந்தர தீர்வைத் தருவதில்லை. ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளும் தற்காலிகத் தீர்வையே தரும்.

* உடல் எடையைக் குறைக்க வேண்டும். சர்க்கரை, உப்பை குறைக்க வேண்டும்.

* வாயுத்தொல்லை, மலச்சிக்கல் இருக்கக்கூடாது. வெயிலில் அலைவதும், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும், மலத்தை அடக்குவதும், உணவுடன் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும் இருப்பதால் தான் மலச்சிக்கல் உருவாகிறது.

* காபி, டீ குடிப்பதை நிறுத்த வேண்டும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* சிறுசிறு உடற்பயிற்சிகளை முடிந்தளவிற்கு செய்து வாருங்கள். லேசான எடை தூக்குதல், சைக்கிள் பெடலிங் போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

* மீன் வகைகள், நார்ப்பண்டங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* மூட்டுவலி அதிகமாக இருக்கும் போது ஓய்வு அவசியம். மனஇறுக்கம் உள்ளவர்கள் தான் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இசை கேட்பது, தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதியாக்குங்கள்.

* பெண்கள் எடைக்குறைப்போடு, நடனம் கற்பது நல்ல சிகிச்சை முறையாகும்.

* கழுத்துப்பட்டை அணிதல், கையைத் தாங்கும் கட்டு ஆகியவை வலி அல்லது காயத்தில் நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

* ஐஸ்பேக் அல்லது ஹீட்பேக் வைப்பதில் குணம் தெரியும். ஆனால், பத்து நிமிடத்திற்கு மேல் அதை வைக்கக் கூடாது.

* மெக்கானிக் சம்பந்தமான வேலைகளைச் செய்யும்போது உறை அணிவதால் கைமூட்டுகளுக்கு அதிக வேலை கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

* பாதங்களுக்கேற்ற வகையில் பொருத்தமான காலணிகளை தேர்வு செய்து அணியுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: