Posted by: shuhaib | 30/05/2011

வேலை இல்லா திண்டாட்டம் கடுமையான அளவுக்கு உயர்வு


[ ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011, 08:14.48 மு.ப GMT ]
கடந்த 14 ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிக அதிக அளவு வேலை இல்லா திண்டாட்டம் பிரிட்டனில் தற்போது உருவெடுத்துள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.ஒரு வருடத்திற்கும் மேலாக உரிய வேலை வாய்ப்பு பெறாதவர்கள் எண்ணிக்கை 1997ஆம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடுகையில் தற்போது மிக அதிகமாக உள்ளது. எட்டரை லட்சம் நபர்கள் 12 மாதங்களுக்கும் மேலாக உரிய வேலை பெறாத நிலை உள்ளது என ஐ.பி.பி.ஆர் அரசியல் ஆய்வு நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலம் வேலை இல்லாத நபர்களின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் நீண்டு காலம் வேலை இல்லா திண்டாட்டம் தலை தூக்க துவங்கி உள்ளது.

1990ஆம் ஆண்டுகளின் இறுதியிலும் 2000ஆம் ஆண்டு கால கட்டத்திலும் நீண்ட கால வேலை இல்லா திண்டாட்ட எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

2009ஆம் ஆண்டில் ஒரு ஆண்டுக்கு மேல் வேலை இல்லாத ஆண்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரமாக இருந்தது. தற்போது 5 லட்சத்து 68 ஆயிரம் ஆண்கள் நீண்ட காலம் வேலை இல்லா நிலையில் உள்ளனர். வேலை இல்லா திண்டாட்டம் 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஆண்களைப் போன்று பெண்களும் ஒரு ஆண்டுக்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும் நிலை அதிகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டில் 1 லட்சத்து 9 ஆயிரம் பெண்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தனர்.

நடப்பாண்டில் 2 லட்சத்து 82 ஆயிரம் பெண்கள் நீண்ட காலம் வேலை இல்லாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் பிரிவில் 19 சதவீதமாக இருந்த நீண்ட கால வேலை இல்லா திண்டாட்டம் தற்போது 27 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

இந்த வேலை இல்லா திண்டாட்டம் முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது என வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் கிறிஸ் கிரே லிங்க் தெரிவித்தார்.


Leave a comment

Categories